%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
Sunday, 21 July 2019 - 7:05
யாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..
48,424

Views
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் ஆவா குழுவினர் மீது காவற்துறையினர் நேற்றிரவு மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

நேற்றிரவு 8.40 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

3 உந்துருளிகளில் 6 பேர் கொண்ட குழுவொன்று மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்த சென்றிருந்ததாகவும், குறித்த தகவல் காவல்துறைக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் தாக்குதலுக்காக சென்றவர்கள் காவற்துறையினரை தாக்க முற்பட்டதாகவும், இதன்போது காவற்துறையினர் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியானார் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஏனைய ஐந்து சந்தேகத்துக்குரியவர்களும் உந்துருளிகளில் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அந்தக் குழுவினரால் கைவிடப்பட்டுச் சென்ற 3 கூரிய ஆயுதங்களும், உந்துருளி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top