%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E2%80%93+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Sunday, 21 July 2019 - 11:33
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – ஒருவர் பலி
2,998

Views
பாரவூர்தியொன்றும் ,முச்சக்கரவண்டியொன்றும், உந்துருளியொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம – களுத்துறை வீதியில் வேவிட்ட சோமானந்த சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த 48 வயதான நபர் உயிரிழந்துள்ளதோடு, முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து பண்டாரகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பண்டாரக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top