%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..
Monday, 22 July 2019 - 7:34
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள 04 பேர்..
1,135

Views
நிட்டம்புவ கலகெடிஹேன பிரதேசத்தில் பிரபுக்கள் வாகனம் மற்றும் பிரபுக்கள் பாதுகாப்பு வாகனங்களில் பிரவேசித்து சிற்றூர்தி ஒன்றை  தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் இன்றைய தினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இன்றைய தினம் அவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதான நான்கு பேரும் நேற்று முன்தினம் அத்தனகல்ல பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்

அதன்போது அவர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், கண்டி நோக்கி பயணித்த டிப்பெண்டர் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, முன்னோக்கி பயணிக்க இடமளிக்கவில்லை எனத் தெரிவித்து கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சிற்றூர்ந்து ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
22,925 Views
48,796 Views
1,546 Views
60,655 Views
468 Views
110,407 Views
Top