%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF...
Friday, 16 August 2019 - 13:39
திஸ்ஸமஹாராம சென்ற கோட்டாபய...
1,198

Views
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முற்பகல் திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
 
இன்று முற்பகல் அபிநவாராம விகாரையிலிருந்து, திஸ்ஸமஹாராம விகாரைக்கு சென்றபோது, ரண்மினிதென்ன பகுதியில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் ஊடக சந்திப்பில் அதன் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
அனைத்து தகைமைகளையும் பூர்த்திசெய்த நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், எவருக்காவது இது குறித்து சந்தேகம் நிலவுமாயின், சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,667 Views
42,666 Views
368 Views
47,717 Views
153 Views
97,125 Views
Top