%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21+
Friday, 16 August 2019 - 13:08
தொலைபேசி மோகத்தால் குளியலறையில் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!
707

Views
திருவள்ளூர் மாவட்டதில் ஒன்றரை வயது ஆண் குழந்தை குளியறையிலுள்ள தண்ணீர் வாளி கவிழ்ந்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கால் எனும் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஒன்றரை வயதில் அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் தனது மகனை ஆசையாகக் குளிப்பாட்டுவதற்காக குளியலறைக்குச் சென்றுள்ளார். அவரது மனைவி அப்போது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். குழந்தையைக் குளிப்பாட்ட அவர் தயாராகிய போது அவரது அறையில் இருந்த கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. எனவே, அதை எடுப்பதற்காக தனது அரைக்குச் சென்றுள்ளார்.

அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக வாளியில் இருந்த தண்ணீர் கவிழ்ந்து குழந்தை மேல் கொட்டியுள்ளது. இதனால் குழந்தைக்குக் கடுமையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

முருகன் கையடக்க தொலைபேசியில் சிறிது நேரம் கதைத்து விட்டு குளியலறைக்கு வந்துள்ளார். வந்து பார்க்கும் போது குழந்தை மூச்சுத்திணறலோடு பரிதாபமான நிலையில் இருந்துள்ளது. அதைப் பார்த்து முருகன் பதறியுள்ளார்.

பின்னர், குழந்தையை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளது. இந்த சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இது தொடர்பின் எழும்பூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
18,667 Views
42,666 Views
368 Views
47,717 Views
153 Views
97,125 Views
Top