ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரியின் அதிரடி அறிவிப்பு..!

Sunday, 18 August 2019 - 18:44

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவர் போட்டியிட்டாலும் போதைப்பொருளை வர்த்தகத்தை ஒழிப்பதாக மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நடைமுறைப்படுத்துவதாக என்ற உறுதிமொழியை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை - திம்புலாகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமேயாகுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

முழு சமூகத்தையுமே அழிவுக்குள்ளாக்கிவரும் போதைப்பொருள் கடத்தலை ஒழித்துக் கட்டுவது காலத்தின் முக்கிய தேவையாகும்.

அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எத்தகைய அரசியல் அனுசரணையும் வழங்கப்பட கூடாது.

எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து விடயங்களையும் மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது கொள்கையாக இருக்க வேண்டும்.

நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையொன்றைப் போன்றே எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காத வெளிநாட்டுக் கொள்கையொன்றும் நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதும் அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியது மட்டுமன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தடையாக அமைந்த கையூட்டல், மோசடிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தநிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips