ஆப்கான் சுதந்திர தினத்தன்று தொடர் குண்டுவெடிப்பு

Monday, 19 August 2019 - 19:33

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஆப்கானிஸ்தானின் 100 வது சுதந்திர தினமான இன்று மக்கள் ஒன்றுகூடும் பல இடங்களில் தொடர்சியான குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த குண்டு வெடிப்புகள் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரான ஜலாலபாட்டில் குறைந்தது 66 பேர் படுகாயமடைந்துள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி பாஹீம் பஷாரி தெரிவித்துள்ளார்.

இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது 10 குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடித்த இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் பயங்கரவாதிகளும், தாலிபான் ஆயுததாரிகளும் பலமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திருமண வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் குறைந்தது 63 பேர் பலியானதுடன் 200 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் பயங்கரவாதிகள் உரிமை கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் குண்டு வெடிப்புகள் காரணமாக ஆப்கானிஸ்தானின் 100வது சுதந்திர தின விழா பெரும் பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips