%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+..
Tuesday, 20 August 2019 - 7:44
ஐக்கிய நாடுகள் சபை கவலை ..
2,236

Views
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

குறித்த நியமனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவுக்கு லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக, ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தின் போது, இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் விடயத்தில், லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நடவடிக்கையானது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும், போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும், மோசமாக பாதிப்பதுடன், பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின், அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top