இத்தாலி பிரதமர் பதவி விலகல்

Wednesday, 21 August 2019 - 8:37

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
இத்தாலி பிரதமர் குசேப் கொன்டெ பிரதமர் பதிவியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வரப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சரத்தின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய மத்திய அரசு இரத்துச் செய்ததை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளைத் துண்டித்தது.

அத்துடன், தமது நாட்டிலுள்ள இந்திய இராஜதந்திரியையும் வெளியேற்றியது.

இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐக்கிய  சபையில் விவாதிக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, அது பலனளித்திருக்கவில்லை.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டுசெல்வதற்கு பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக, அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மொஹமட் குரேஷி ளூயா ஆநாஅழழன ஞரசநளாi தெரிவித்துளளார்.

அனைத்து சட்ட அம்சங்களையும் பரீசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips