%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D..%3F
Thursday, 22 August 2019 - 7:38
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்..?
906

Views
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சென்றுள்ள ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் சிவி விக்னேஸ்வரனை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் ஆறுமுகம் தொண்டமான் யாழ்ப்பாணம் சென்று விக்னேஸ்வரனை சந்தித்து அரசியல் கூட்டணி சம்பந்தமாக கலந்துரையாடி இருந்தார்

எனினும் அதன்போது இணக்கப்பாடு காணப்படவில்லை

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டை எட்டும் வகையிலான கலந்துரையாடல் இடம்பெற இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்

அதேநேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் வவுனியாவில் முன்னாள் போராளிகளின் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பலப்படுத்துவது குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top