%E0%AE%AA.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Thursday, 22 August 2019 - 7:45
ப.சிதம்பரம் கைது
649

Views
இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் ஊடகத்திற்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதி வழங்கியமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன்பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் உள்ள அவரின் வீட்டுக்குள் செல்வதற்கு, மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு வீட்டின் பாதுகாவலர் அனுமதியளிக்காத காரணத்தினால், அதிகாரிகள் வீட்டின் சுவரேறி உள்ளே சென்று சிதம்பரத்தைக் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பரபரப்பு ஏற்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top