369+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
Thursday, 22 August 2019 - 10:01
369 கிராம் தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது..
1,206

Views
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்துஇ ஒரு தொகை தங்க ஆபரணங்களை கொழும்புக்கு கொண்டுசெல்வதற்காக பேருந்து ஒன்றில் பயணிக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் நேற்று இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
 
கொழும்பைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேகத்துக்குரியவரிடமிருந்து 21 இலட்சம் ரூபா பெறுமதியான 369 கிராம் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றுள் 24 பெண்டன்கள்இ 16 தோடுகள்இ 11 மோதிரங்கள் மற்றும் 21 வலையல்கள் என்பன அடங்கியிருந்ததாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த தங்க ஆபரணத்தை கொழும்பில் கையளிக்குமாறுகூறிஇ இந்தியாவிலிருந்து வருகைதந்த பயணி ஒருவர் தன்னிடம் வழங்கியதாக கைதுசெய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
 
இதெவேளை சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இர்ணடு பேர் தலைமன்னார் கடற் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
மன்னார் பிரிவு விஷ போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளினால் நேற்று இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்துக்குரியவர்இ தலைமன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top