மேலும் சில பகுதிகளுக்கு காணிகள்...

Thursday, 22 August 2019 - 13:41

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
பெருந்தோட்டங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு 7 பேர்ச்சஸ் காணிகளை வழங்க வேண்டிள்ளயுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
 
இதனை தாம் ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அந்தோனிமலை மாவில போயில் ரங்கலை உண்ணஸ்கிரிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் 7 பேர்ச்சஸ் காணிகளை வழங்கும் நடவடிக்கை இதுவரை இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில்இ எஞ்சியுள்ள காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இலங்கை வரலாற்றில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமையை நல்லாட்சி அரசாங்கமே ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தான் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பெருமளவான காணி உரித்துக்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உரித்துக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை தாங்கள் நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips