%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...
Saturday, 24 August 2019 - 7:07
ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல்...
4,718

Views
அவசரகால சட்டம் நீடிக்கப்படாதபோதும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதும், முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த வர்ததமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 40 ஆம் அத்தியாயத்தின் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் 12 ஆம் பிரிவின் கீழ், தனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு, ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர், நாட்டில் கடந்த நான்கு மாத காலமாக அவசகால சட்டம் அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,243 Views
45,008 Views
1,612 Views
52,400 Views
230 Views
101,658 Views
Top