%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Saturday, 24 August 2019 - 8:04
அமேசன் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பிரேஸில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
2,691

Views
அமேசன் மழைக்காடுகளில் பரவிவருகின்ற காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உதவியளிக்குமாறு பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ அந்த நாட்டு இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் கடுமையான அழுத்தங்களின் பின்னர், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, இயற்கை இருப்புக்கள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லைப் பகுதிகள் என்பனவற்றுக்கு படையினர் அனுப்பிவைக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் நுரையீரல் என சூழலியலாளர்களினால் அழைக்கப்படும் அமேசன் மழைக்காடுகளில் தொடர்;ச்சியாக காட்டுத்தீ பரவிவருகின்றது.

உலகிலேயே பாரிய விஸ்தீரணத்தை கொண்டுள்ள அமேசன் ஈரலிப்பு காடு ஐந்தில் ஒரு பங்கு பிராணவாயுவை உற்பத்தி செய்வதுடன், 20 சத வீதமான சுத்தமான நீரை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டில் 30 லட்சம் வகையான தாவரங்கள் மற்றும் மிருகங்கள் உள்ளதுடன், 10 லட்சம் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

செயற்கை கோள் தகவல்களுக்கு அமைய, 2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், காட்டுத் தீ சம்பவங்கள் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு தீயினை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பொல்சொனரோஸ் அரச நிர்வாகம் எடுக்க தவறியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அமேசன் காடுகளைக் பாதுகாக்குமாறு வலியுறுத்தி உலகில் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top