%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Saturday, 24 August 2019 - 16:00
பா.ஜ.க மூத்த தலைவர் காலமானார்
257

Views
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், இந்திய முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி இன்று காலமானார்.

66 வயதான அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் கடந்த 9 ஆம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

1952ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி, மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத் மூலம் மாணவர் அரசியலுக்கு வந்தார்.

அருண் ஜெட்லி உச்ச நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு முதல் 2004 வரை இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது சட்டம் மற்றும் நீதி, தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 2009 முதல் 2014 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமரான போது நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் உடல் நிலைமையை கருத்திற்கொண்டு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top