%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%3F
Sunday, 25 August 2019 - 8:38
அமேசன் தீப்பரவலுக்கான காரணம் இதுவா?
6,179

Views
சுற்றுச்சூழல் பாதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அறவிடப்படும் அபராதங்கள் கடுமையான அளவில் வீழ்ச்சியடைந்தமையே, பிரேஸில் அமேசன் மழைக் காடுகளில் தீப்பரவல்கள் அதிகரித்தமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியிப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேஸில் சுற்றுச்சூழல் அதிகார சபையின் தகவல்களுக்கு அமைய, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் 23 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு அபராதங்கள் குறைசவடைந்துள்ளது.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் தீப்பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை, 84 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் 23 ஆம் திகதிவரை 9 ஆயிரத்து 771 அபராதங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், இந்த ஆண்டு குறித்த காலப்பகுதியில் 6 ஆயிரத்து 895 அபராதங்களே பதிவாகியுள்ளன.

இதற்கமைய, அந்தக் காலப்பகுதியில் அபராதங்களின் எண்ணிக்கை, 29.4வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனோரின் அரசாங்கம், தண்டனையற்ற கலாசாரத்தின்மூலம், மழைக்காடுகளை அழிப்பதாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top