%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D..
Sunday, 25 August 2019 - 11:11
திருப்பியனுப்பப்பட்ட எதிர் கட்சி தலைவர்..
562

Views
மோடி அரசினால் ஜம்மு-காஸ்மீர் பகுதியில் காணப்பட்ட பயங்கரமான சூழ்நிலை குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அடுத்து நேற்று மாநில தலைநகர் ஸ்ரீ நகருக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் ஆளுனர் சத்ய பால் மாலிக் விடுத்த அழைப்பிற்கு அமையவே ராகுல் காந்தி காஸ்மீர் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை குறித்து பார்வையிடவே ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக ஒரு விமானத்தை அனுப்பவும் தயாராக இருப்பதாக சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்தாவிட்டாலும் காஸ்மீர் பகுதியில் தினசரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஈடாக காஸ்மீரில் காணப்படும் நிலைமை சாதாரணமானது அன்று எனவும் எதிர்கட்சியினர் காஸ்மீருக்குள் செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top