%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%2C+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Sunday, 25 August 2019 - 13:11
வர்த்தக ஒப்பந்தத்திற்கு முன்னர் கட்டுப்பாடுகளை அகற்றுமாறு பிரித்தானியா, அமெரிக்காவிடம் கோரிக்கை
616

Views
பிரித்தானியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வம் கொண்டிருக்குமாயின், அதற்கு முன்னதாக பிரித்தானிய வர்த்தகத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்பட வேண்டும் என அந்த நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நோக்கி பயணிக்கும் வேளையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இன்று ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் போதும் இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகளை தொடரவுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தவிர, ஐரோப்பிய ஒன்றிய சபையின் தலைவர் டொனால்ட் ரஸ்க்குடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

இதன் மூலம் பல பிரித்தானிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்கும் வாய்ப்பினை பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top