%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..
Sunday, 25 August 2019 - 14:09
ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக பங்களாதேஷ் கடுமையான போக்கு..
317

Views
மியன்மாரில் இருந்து வருகை தந்து பங்களாதேஷ் அகதி முகாம்களில் வாழும் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக கடுமையான போக்கை கடைப்பிடிக்கப் போவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

மியன்மாரில் பாரிய தாக்குதலுக்கு உள்ளான நிலையில், ரொஹிங்கிய முஸ்லீம் மக்கள் எல்லை தாண்டி பங்களாதேஷில் அடைக்கலம் கோரியிருந்தனர்.

இந்த அகதிகள் தொடர்பாக பங்களாதேஷ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல் மோமன் கருத்து தெரிவிக்கையில், தொடர்ச்சியாக குறித்த அகதிகள் எமது நாட்டில் தங்கியிருப்பதன் காரணமாக பாரிய பொருளாதார பிரச்சனையை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டார்.

சர்வதேச செய்தி ஸ்தாபனம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்கு கொள்கையில் எந்த மாதிரியான மாற்றம் கொண்டு வரப்படும் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

அகதிகளை மீள அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப பங்களாதேஷ் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி முற்றாக தோல்வியில் முடிந்துள்ளது.

அவர்களை ஏற்றி செல்வதற்காக பல பயணிகள் பேரூந்துக்கள் முகாமிற்கு வந்த போதிலும் ஒரு அகதி கூட மீள மியன்மார் செல்ல மறுத்துள்ளனர்.

கடந்த 2017 ஓகஸ்ட் மாதம் மியன்மார் இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி பல கிராமங்கள் முற்றாக அழிந்ததுடன் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் 7 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் எல்லை தாண்டி பங்களாதேஷ் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, மியன்மார் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் இன ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான போதியளவு ஆதாரம் உள்ளமையை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top