%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D...
Thursday, 12 September 2019 - 10:35
வேற்று கிரகம் ஒன்றில் நீர்...
184

Views
விண்ணாய்வாளர்களால் முதன்முறையாக வேற்று கிரகம் ஒன்றில் நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.2-18.பி என்று பெயரிடப்பட்டுள்ள தூரக் கிரகம் ஒன்றில் நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த கிரகம் பூமியில் இருந்து 111 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

அதாவது 650 மில்லியன் மில்லியன் மைல்களுக்கு அப்பால் இந்த கிரகம், நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருகிறது.

இது பூமியை ஒத்த மேற்பரப்பை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்த கிரகத்தின் தன்மை குறித்த பூரண ஆய்வுகளை தொலைநோக்கி ஊடாக மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கிரகத்தின் வெப்பநிலையானது, நீர், திரவத்தன்மையுடன் இருப்பதற்கு ஏற்ற அளவில் உள்ளது.

அது உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்தாக இருக்கும் என்றும் விண்ணாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top