+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
Thursday, 12 September 2019 - 12:02
மனு தாக்கல் ரத்து
1,664

Views
அவன்காட் விவகாரம் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால், கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுக்களை நிராகரித்து வழங்கப்பட்ட உத்தரவுகளை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு, காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையை நடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டதன் ஊடாக, அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக தெரிவித்து, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கோட்டாபய ராஜபகஷ உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என தெரிவித்து, கோட்டாபய ராஜபக்ஷவின் தரப்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

எனினும் அவை விசாரணைகளுக்கு எடுத்துக்ககொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டன.
 
இந்த உத்தரவுகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் இன்று இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top