%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21%21
Thursday, 12 September 2019 - 13:02
எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்!!
2,544

Views
எதிர்வரும் நாட்களில் பல்வேறு பிரதேசங்களில் 100 தொடக்கம் 150மில்லமீற்றர் அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமைமையான மழைப் பெய்யும்.

அத்துடன் பிற்பகல் வேளையில் ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், குக்குளேகங்க பிரதேசத்தில் அதிகபட்சமாக 117 மில்லிமீற்றர் அளவில் மழை பதிவாகியுள்ளது.
 
இதேவேளை, நேற்று இரவு முதல் காலி நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பெய்த கடும் மழை காரணமாக, தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

மொரகொட ஏரி பெருக்கெடுத்ததன் கரணமாக, தங்கெதர, சமகிங்வன்கம, மிலிந்துவ போன்ற பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் 18 மாவட்டங்களில் இன்னும் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

இந்த மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரத்து 828 குடும்பங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 70 ஆயிரத்து 787 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top