%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81
Thursday, 12 September 2019 - 13:11
நிராகரிக்கப்பட்ட மனு
870

Views
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும், நளினி, சிறை விடுமுறைக் காலத்தை ஒக்டோபர் 15 வரை நீடிக்கக் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமது மகளின் திருமணத்திற்காக ஒரு மாத கால சிறை விடுமுறைப்பெற்று கடந்த ஜூலை மாதம் 25-ம் திகதி வெளிவந்தார்.
 
அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

தன் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், சிறை விடுமுறை காலத்தை நீட்டிக்க கோரி சென்னை மேல் நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நளினிக்கு மேலும் 3 வார கால நீடிப்பு வழங்கியது.
 
இந்நிலையில், இந்த விடுமுறைக்காலத்தை ஒக்டோபர் 15-ம்; திகதி வரை நீட்டிக்கக் கோரி நளினி சென்னை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவை, நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் கொண்ட ஆயம் நிராகரித்தது.

இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், தனது விடுமுறைக்காலத்தை நீட்டிக்கும்படி நளினி கூறியதை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top