+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
Thursday, 12 September 2019 - 13:34
ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கேயன்றி ஜனாதிபதியாவதற்கில்லை..
93

Views
ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவது, ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கேயன்றி ஜனாதிபதியாவதற்கில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் தனது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாவதற்காக ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவதில்லை.

ஜனாதிபதியை தீர்மானிப்பதற்காகவே போட்டியிட வேண்டியுள்ளது.

ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என்ற கோசமே எமது கோசமாகும்.

இது ஒரு பௌத்த நாடு.
 
நல்ல பௌத்த சிங்கள தலைவரை இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும்.

தீவிரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும்.

எந்தவொரு சமயத்தையும் விமர்சிக்க கூடாது போன்ற விடயங்களை செய்யக் கூடிய நாட்டை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய சர்வதேசத்துக்கு முகம் கொடுக்கக் கூடிய நல்ல சிறந்த பௌத்த தலைமைத்துவத்தை நாட்டுக்கு ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும்.

இதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 வீதமான வாக்குகளை பெற முடியாத சூழ்நிலை வருமாக இருந்தால், முஸ்லிம் சமூகத்தினுடைய வாக்குகள் யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும்.

நாட்டில் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பாரிய சதிகள் தொடர்வதைத் தடுக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஒன்று பட்டு செயற்படவேண்டும்.

எனவே தான் நாம் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top