%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21%21+
Thursday, 12 September 2019 - 16:01
வசமாக சிக்கிக் கொண்ட கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை!!
6,732

Views
புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிப்பானை இம்ரானிற்கு வழங்குவதற்காக இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு மின்னேற்றிகளையும் எடுத்து சென்ற அவரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொண்டு சென்ற உணவு பொதியில் இரகசியமாக இந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்றைய கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், காஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட தரப்பினர் அங்கு வந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தற்போது ரத்கம காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top