%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
Friday, 13 September 2019 - 19:31
ரொசல்ல வயோதிப பெண் கொலை.. மருமகளும் பேரனும் கைது...
1,480

Views
வட்டவளை - ரொசல்ல பகுதியிலிருந்து காணாமல் போன 81 வயது பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட வயோதிப பெண்ணின் மகன் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், குறித்த பெண்ணின் சடலம் வீடொன்றின் பின்புறத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்தப் பகுதிக்கு சந்தேகநபர் அழைத்து செல்லப்பட்ட போது பிரதேசவாசிகள் அவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர்.

இந்தநிலையில் காவற்துறையினர் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மீட்கப்பட்ட சடலம் மீதான மரண விசாரணைகள் டிக்கோய மாவட்ட வைத்தியசாலையின் சட்;டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பெண் கொலைசெய்யப்பட்டுள்ளாரா என்பது மரண விசாரணைகளில் கண்டறியப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top