%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF...
Friday, 13 September 2019 - 20:03
பிரதமரை சந்தித்த கனிமொழி...
51

Views
இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும், மறைந்த கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்ட குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதேநேரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, பைஸல் காசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினை, வட,கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,338 Views
45,141 Views
1,867 Views
52,645 Views
329 Views
101,935 Views
Top