பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை..!

Sunday, 15 September 2019 - 13:15

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், பாரபட்சமாக அல்லது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேஸ்புக் ஊடாக பிரசாரங்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.

இதையடுத்து. குறித்த கணக்கை தடை செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips