கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி

Monday, 16 September 2019 - 9:42

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் வழியாக சுற்றுலா சென்ற படகு கவிழந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

தேவிப்பட்டினம் அருகாமையில் கண்டி போச்சம்மா ஆலயத்தில் இருந்து பாப்பிகொன்டலு என்ற சுற்றுலாத்தலத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் கோதாவரி ஆற்றின் வழியாக 60 க்கும் அதிகமானவர்கள் ஆந்திர மாநில அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகில் நேற்று சென்றனர்.

இதன்போது, ஆற்றுச்சுழலில் சிக்கிய அந்த கச்சுலூரு பகுதியின் அருகில் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர் ஆற்றுக்குள் மூழ்கி கொண்டிருந்தவர்களில் 23 பேரை உயிருடன் காப்பாற்றி, கரை சேர்த்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips