கலாசார அமைச்சிற்குள் அதிரடியாக நுழைந்த தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள்

Wednesday, 18 September 2019 - 16:32

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு தெரிவித்து தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் குழுவொன்று பத்தரமுல்ல-செத்சிறிபாயவில் அமைந்துள்ள வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் வருகைத்தந்த இவர்கள், குறித்த பிரச்சினைக்கு பொறுப்பான அமைச்சர் வரும் வரை அமைச்சு கட்டடத்தின் நுழைவாயில் பகுதியில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2 வருடங்களுக்கு முன் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடாக, குறித்த திணைக்களத்திற்கு 1500 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக இவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தற்போதைய கலாசார அமைச்சரான சஜித் பிரேமதாச 1450 பேரை சேர்த்துக் கொண்டதோடு, இதற்கு முன் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுக்கும் மத்திய கலாசார நிதியின் ஊடாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சர் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் இவ்வாறு கலாசார அமைச்சகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips