எச்சரிக்கையுடன் தாக்குதல்களை இடைநிறுத்திய ஹவுதி போராளிகள்...

Sunday, 22 September 2019 - 12:55

%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
சவுதி அரேபியாவிற்கு எதிரான அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதாக ஈரானின் ஒத்துழைப்புடன் செயல்படும் யேமனில் நிலைகொண்டுள்ள ஹவுதி போராளிக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட சமாதான பிரேரணையினை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

இது வரவேற்கத்தக்க வலுவான சமாதான முயற்சி என்பதுடன், யேமன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் தன்மையை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யேமன் சிவில் யுத்தம் காரணமாக இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதுடன், பல மில்லியன் கணக்கான யேமன் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையினை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு யேமனின் ஜனாதிபதி அப்ரப்புவா மன்சோர் ஹாடி டயினை, ஹவுதி போராளிகள் பதவியில் இருந்து அகற்றியதுடன், தலைநகர் சானாவை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இதனை அடுத்து சவுதி அரேபியா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகள் யேமனில் தாக்குதல்களை அதிகரித்து வந்துள்ளன.

அதற்கு பதிலடியாக ஹவுதி போராளிகள் அதிக எண்ணிக்கையிலான ஆள் இல்லா விமான தாக்குதல்கள், ஏவுகணை மற்றும் ரொக்கட் தாக்குதலை பாரசீக குடா நாடுகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ஹவுதி போராளிகளின் அதிஉயர் அரசியல் சபையின் தலைவர் மஹாதி அல் மஷாட் தொலைக்காட்சியின் மூலம் தாக்குதல் நிறுத்தம் குறித்து அறிவித்தார்.

அதேபோன்று சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தும் பட்சத்திலேயே தாம் தாக்குதலை உறுதியாக நிறுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமது பிரேரணை உரிய முறையில் ஏனையவர்கள் மேற்கொள்ள தவறும் பட்சத்தில் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் எனவும் ஹவுதி போராளிகளின் அதிஉயர் அரசியல் சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips