இந்தோனேசியாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் 21 பேர் பலி

Tuesday, 24 September 2019 - 14:29

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+21+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தினால், குறைந்த பட்சம் 21 பேர் உயிரிழந்தனர்.

கல்லூரி மாணவர்கள் உள்ளடங்கிய குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

அவர்களால் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை ஆசிரியர் ஒருவரால் இனரீதியான கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவித்து, இந்த போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

எனினும் அவ்வாறான கருத்துக்கள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதமும் இந்த நகரில் இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips