ஈராக்கில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட வன்செயலில் 99 பேர் பலி

Sunday, 06 October 2019 - 13:23

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+99+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட வன்செயல் நடவடிக்கைகள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 99 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அநாவசியமான இந்த உயிர் இழப்புக்களை உடனடியாக நிறுத்த சம்பந்தப்பட்டவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து நாடுகளில் மட்டும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பலர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உதவி வழங்கு பிரிவின் தலைவர் ஜீனி ஹெனிஸ் தெரிவித்துள்ளார்.

இது தவிர, உயிர் இழப்புக்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆர்ப்பாட்டங்களின் ஏற்பாட்டாளர்கள், ஈராக்கில் ஏற்பட்டுள்ள வேலையில்லா பிரச்சனை, பொது மக்களுக்கான அரச சேவையின் தரம் மற்றும் ஊழல்களை அகற்றும் நோக்கிலேயே கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று கிழக்கு பக்தாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக ஈராக்கிய பாதுகாப்பு படைகள் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, குறைந்தது 99 பேர் பலியானதுடன் சுமார் நான்காயிரம் பேர் காயமடைந்துள்ளதாக ஈராக்கிய நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களின் பின்னர், அதிக அளவிலான மக்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன் பிரதமராக பதவி ஏற்ற அடேல் அப்டெல் மஹாதி எதிர்நோக்கும் பாரிய சவால் இதுவென நம்பப்படுகின்றது.

பகல் நேர ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈராக்கில் உள்ள சவுதி அரேபியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அல் அரேபிய தொலைக்காட்சி உட்பட பல தொலை காட்சி நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips