பிச்சை எடுத்து 16 கோடி சேர்த்த பெண்

Monday, 07 October 2019 - 10:12

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+16+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D
லெபனான் நாட்டில் சீதோன் நகரில் தனியார் மருத்துவமனையின் வாசலில் ஹஜ் வாபா முகமது அவத் என்ற பெண் தினமும் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இவரை மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இவர் தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஜே.டி.பி. வங்கியில் தினமும் வைப்பிலிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜே.டி.பி. வங்கியின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததையடுத்து, அந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டது.

இந்த வங்கியில் வைப்பு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்துக்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கி உறுதி அளித்தது.

இந்த நிலையில், ஹஜ் வாபா முகமது அவத்துக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து 3.3 பில்லியன் லெபனான் பவுண்டுக்கான 2 காசோலைகள் (இலங்கை மதிப்பில் ரூ.16 கோடி) வழங்கப்பட்டன. இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து ஹஜ் வாபா முகமது அவத் கோடீசுவரி என்பது தெரிந்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுபற்றி அந்த மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஒருவர் கூறும்போது, “ஹஜ் வாபா முகமது அவத் பிச்சைக்காரி என்றே நினைத்திருந்தோம். கடந்த 10 வருடமாக மருத்துவமனை வாசலில்தான் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை இந்தப் பகுதியில் எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் கோடீஸ்வரி என்ற செய்தி வெளியானது மூலம் அவர் இந்த நகரம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்” என கூறினார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips