8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..

Thursday, 10 October 2019 - 9:36

8+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
கலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம் வீடுகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக காற்று வீசக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளிடப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கம்பங்கள் முறிந்து வீழ்வதனால், காட்டுத் தீ பரவல் மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பகிறது.

இதற்கமைய, சுமார் 5 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பசுபிக் எரிவாயு மற்றும் மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மதியநேரத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரனமாக காணி அழிவடைந்துள்ளது.

அத்துடன், 86 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips