கிளிநொச்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- அறிக்கை கோரும் மதுவரி திணைக்களம்

Monday, 14 October 2019 - 19:42

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
கிளிநொச்சி - அறிவியல் நகரில் இன்று காவற்துறையின் கட்டளையை மீறி பயணித்த, மதுவரி திணைக்கள அதிகாரிகளின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறித்த முதற்கட்ட அறிக்கையை, மதுவரி திணைக்களம் கோரியுள்ளது.

இது தொடர்பாக வடமத்திய மாகாண உதவி மதுவரி ஆணையாளர் மற்றும் மேலதிக மதுவாரி ஆணையாளர் தலைமையிலான விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கெப்பத்திகொல்லாவ மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் இன்று அதிகாலை தங்களது வாகனத்தில் கடமைக்காக சென்ற போது, அறிவியல் நகர் பிரதேசத்தில் காவற்துறையினாரால் வழி மறிக்கப்பட்டனர்.

எனினும் அவர்கள் வாகனத்தை நிறுத்தாது சென்றனர் என்ற நிலையில் காவற்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கஞ்சா தொகை ஒன்று குறித்த வாகனத்தில் கடத்தப்படுவதாக கிளிநொச்சி போதை ஒழிப்பு காவற்துறைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தங்களது அதிகாரிகள் பிழை செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips