அமெரிக்காவின் அழைப்பை துருக்கி நிராகரிப்பு

Wednesday, 16 October 2019 - 13:21

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
வடக்கு சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது.

அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆமைந Pநnஉந மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோஆகியோர் துருக்கிக்கு விஜயம் மேற்கொள்ளத் தயாராகியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள துருக்கி ஜனாதிபதி ரிசெப் டையிப் எர்டோஹன் துருக்கியின் தாக்குதல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு சிரியாவின் எல்லைப் பகுதியில் குர்திஸ் போராளிகள் தலைமையிலான சிரிய ஜனநாயக போராளிகள் குழுவினருக்கு எதிராக துருக்கியின் படையினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் ஊடுறுவல்களை தடுப்பதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக, துருக்கியின் ஜனாதிபதி கூறுகிறார்.

ஆனால் இதற்கு ரஷ்யாவும் எதிர்ப்பை வெளியிட்டிருப்பதுடன், ஜேர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளும் யுத்த நிறுத்தத்தை கோருகின்றன.

அதேநேரம், ரஷ்யாவின் பின்புலத்தைக் கொண்ட சிரிய அரச படையினர், வடக்கு சிரிய எல்லை நோக்கி முன்னேறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips