ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..

Thursday, 17 October 2019 - 8:20

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
இலவசக் கல்வி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் அமரர் கன்னங்கராவின் இலவசக் கல்விக்கொள்கை மற்றும் கோட்பாடு என்ன என்பது பற்றி சமூகத்திற்கு சரியான புரிந்துணர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக அமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை தொடர்பான ஆய்வு நிறுவகமொன்றினை விரைவில் ஸ்தாபிக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலவசக் கல்வியின் தந்தையாக போற்றப்படும் இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சரான அமரர்  சி.டப்ளியு.டப்ளியு. கன்னங்கராவின் ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வு  நேற்று இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும் அமரர் கன்னங்கர நினைவு கூறப்படுவதற்கு இன்றைய அரசியலில் அத்தகைய உன்னத நபர்களின் தேவைப்பாடு அதிகமாக காணப்படுவதே காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரில் குறைந்தது 25 பேராவது அமரர் கன்னங்கராவை போன்றவர்களாக இருப்பின் எமது நாடு மேலும் முன்னேற்றம் அடைந்திருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips