பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு...

Tuesday, 22 October 2019 - 8:06

+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81...
கனடாவில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

338 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றிருந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புக்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த தேர்தலில் தற்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2 வது முறையாக போட்டியிடுகிறார்.

தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தமை மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியாகிருக்கும் சூழலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறுவதில் பாரிய சிக்கலை எதிர்கொள்ளும் எனவும் தேர்தலுக்கு பின்னரான கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips