%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
Sunday, 10 November 2019 - 13:43
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விசேட நடவடிக்கை..
566

Views
ஜனாதிபதித் தேர்தலுக்காக அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 70 இலட்சத்துக்கு அதிகமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டதாக அரசாங்க அச்சகர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

இதேநேரம், வாக்குகளை எண்ணும் நிலையங்களின் பணிகளுக்கு அவசியமான சில ஆவணங்கள் தொடர்தும் அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டையையோ அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணத்தை சமர்ப்பித்து, வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்காக, ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விசேட ஆவணத்தை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலன்று தொடருந்து சேவைகள் வழமைபோல இடம்பெறும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தேர்தல் பணிகளுக்காக தேசிய போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் காரணமாக, போக்குவரத்து சேவையில் பேருந்துகளை ஈடுபடுத்துவதில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த தினத்தில் பேருந்துகளை இயன்றளவு அதிகளவில் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தலன்று போக்குவரத்து சேவைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
This is a Paid Advertisement
News Image
Hiru News Programme Segments
22,737 Views
48,508 Views
999 Views
59,986 Views
406 Views
109,806 Views
Top