போலி கணக்குகளை நீக்கியுள்ள பேஸ்புக்

Thursday, 14 November 2019 - 13:24

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D
2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 5.4 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கையாளுதல் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான எதிர் போராட்டத்தின் விளைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
 
போலியான கணக்குகளை உருவாக்குவதற்கான வளர்ந்து வரும் முயற்சிகளுக்கு மத்தியில், பேஸ்புக் தனது பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதுடன், போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் அவற்றை அகற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் பேஸ்புக்கின் சர்வதேச செயற்பாட்டில் உள்ள பயனர்களில் ஐந்து சதவீதமான கணக்குள் போலி கணக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
போலியான மற்றும் தவறான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைக் கண்டறிந்து தடுக்கும் திறனை தாங்கள் மேம்படுத்தியுள்ளதாக, இணைய நிறுவனம் தனமது அண்மைய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
இந்த கண்டறிதல் முறைகளைப் பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்குவதற்கான மில்லியன் கணக்கான முயற்சிகளை ஒவ்வொரு நாளும் தடுப்பதாக மதிப்பிட முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips