சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி...!!

Friday, 15 November 2019 - 8:07

+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21
இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை 4 ஆயிரத்து 987 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
 
7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
 
பரீட்சார்த்திகள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பரீட்சை அனுமதிப்பத்திரத்துடன், தேசிய அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணம் இல்லாவிட்டால். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips