வட சிரியாவில் தரையிறங்கிய ரஷ்ய துருப்பினர்

Friday, 15 November 2019 - 19:25

%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
வட சிரியாவில் உள்ள வான்படை தளத்தில் இருந்து அமெரிக்க துருப்பினர் வெளியேறிய நிலையில் ரஷ்ய துருப்பினர் தரையிறங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

வான் தாக்குதல்கள் மேற்கொள்ளும் உலங்கு வாநூர்திகள் மற்றும் கணிசமான ரஷ்ய இராணுவத்தினர் முதல் கட்டமாக தரையிறங்கியுள்ளனர்.

வட அலெப்போ மாகாணத்தில் சிரிய துருக்கிய எல்லை பிரந்தியத்தில் ரஷ்ய இராணுவத்தினர் ரஷ்ய இராணுவ காவல்துறையினரின் மேற்பார்வையில் தற்போது அங்கு நிலைகொண்டுள்ள காட்சிகள் ரஷ்ய தொலைக்காட்சியில் காட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் திடீர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியாவில் உள்ள சில பிரதேசங்களில் இருந்து அமெரிக்க இராணுவத்திரை தாயகம் திரும்பும்படி உத்தரவிட்டிருந்தார்.

சிரிய மக்களுக்கு தேவையான மனிதாபிமான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நோக்கிலேயே ரஷ்ய படைத்தரப்பினர் அங்கு சென்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிரிய-துருக்கிய எல்லை பிராந்தியத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த பாதுகாப்பு படைத்தரப்பினர் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips