விபத்தில் உயிர்தப்பிய இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Monday, 18 November 2019 - 15:36

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF..%21
கிரிஉல்ல-கட்டுகம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்திற்கு பின் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார.

நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியின் கதவை சாரதி திறந்த வெளியேற முற்பட்ட போது, பின்னால் வந்த உந்துருளி குறித்த பாரவூர்தியின் கதவில் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை ஏற்பட்டது. உந்துருளியில் பயணம் செய்த இரண்டு நபர்களும், பாரவூர்தியின் சாரதியான காவல்துறை அதிகாரி மற்றும் அவரது உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அங்கு ஏற்பட்ட கைகலப்பில் உந்துருளியில் பயணித்த இருவர் மீது மேற்படி காவல்துறை அதிகாரியும் அவரது உதவியாளரும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த உந்துருளியில் பயணித்த இருவரும் தம்பதெனிய மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உந்துருளியின் சாரதியான 19 வயது இளைஞன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips