கோட்டாபய மீது நம்பிக்கை உள்ளது.... சம்பந்தன் தெரிவிப்பு...

Wednesday, 20 November 2019 - 8:05

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81....+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என தாம் விரும்புவதுடன், அவர் அவ்வாறு செயற்படுவார் என தான் நம்புவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைவிடவும், இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

திருகோணமலையில் 83 வீதமும், அம்பாறையில் 80 வீதமும், மட்டக்களப்பில் 77 வீதமும், வன்னியில் 73 வீதமும், யாழ்ப்பாணத்தில் 66.5 வீதமுமாக மக்கள் வாக்களித்திருப்பது நிறைவளிக்கின்றது.

இந்த நிலையில், புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச்செயற்பட வேண்டுமென விரும்புவதாகவும், அவர், அவ்வாறு செயற்படுவார் என தான் நம்புவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம், அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும், நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும், அதன்மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும், அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும், அவர் சார்ந்தோருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips