வீதியில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - காணொளி

Wednesday, 11 December 2019 - 6:39

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+50+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது.

பனிப்பொழிவு காரணமாக பல்வேறு பகுதிகளில் வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் ஐஒவா மாகாணத்தில் இன்று நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக 50க்கு அதிகமான வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அம்மாகாணத்தின் அல்டோனா மற்றும் மேற்கு மிக்ஸ்மாஸ்டர் பகுதியை இணைக்கும் நெடுச்சாலையில் பனிப்பொழிவு மற்றும் வெளிச்சமின்மையால் வாகன சாரதிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இதன் காரணமாக முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் வேகமாக மோதி அடுத்தடுத்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர். இதனால் பலமணி நேரத்திற்கு மேற்படி வீதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips