இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள்..

Thursday, 12 December 2019 - 13:41

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D..
குடியுரிமை திருத்தச் சட்டமூலம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட நாள் இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமூலம் மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள, முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கு, இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும் என இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நீண்டகாலமாக இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள், மியன்மரிலிருந்து வருகைதந்த ரோகிங்யா முஸ்லிம்கள் ஆகிய அகதிகளின் நிலை குறித்து இந்தச் சட்டத்தில் எந்த அறிவிப்பும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த நிலையில், மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவான நிலையில், 20 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, குறித்த சட்டமூலம் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டு, அவரின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், குடியுரிமை திருத்த சட்டமூலம் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில், அறிக்கை ஒன்றின் மூலம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டமூலம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட நாள் இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடிப்படை கொள்கைகளுக்கு இந்த சட்டமூலம் சவால் விடுக்கிறது.

இந்தியாவின் பண்முகத்தன்மையில் நம்பிக்கையில்லாத குறுகிய எண்ணம் கொண்ட சக்திவாய்ந்தவர்களுக்கே இந்த சட்டமூலம் நிறைவேறியமை வெற்றியாக கருதப்படும் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.


இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூவர் அகால மரணம்.....! கார்ட்டூனிஸ்ட் மதன் சோகத்தில்
Thursday, 20 February 2020 - 10:07

'இந்தியன் 2' படபிடிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்... Read More

இந்தியா வரும் அமெரிக்க அதிபரின் விமானம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
Thursday, 20 February 2020 - 9:41

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார்.... Read More

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி
Thursday, 20 February 2020 - 6:53

அவுஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர்... Read More