திருகோணமலையினை அதிர வைத்துள்ள சம்பவம்

Friday, 13 December 2019 - 10:47

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
திருகோணமலையில் தாயாரால் உயிருடன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் சிசுவின் சடலமொன்று, புதைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று  தோண்டி எடுக்கப்பட்டது.
 
திருகோணமலை - உப்புவெளி - விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி குறைமாதத்தில் பிறந்த குறித்த சிசுவை, அதன் தாய் புதைத்துள்ளதாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்சா தலைமையில், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காவற்துறையினரின் முன்னிலையில் குழந்தையின்  உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
 
குறித்த சிசுவின் தாயார் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது கிணறு ஒன்றில் தவறிவிழுந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை - இன்பருட்டிப் பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


பல்வேறு கருத்துக்கள்..
Thursday, 20 February 2020 - 20:57

2020ஆம் ஆண்டுக்கான வாக்கு கணக்கு குறித்து ஆளும் கட்சி மற்றும்... Read More

திறக்கப்பட்டுள்ள வீதி
Thursday, 20 February 2020 - 20:18

தி பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக... Read More

சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு ..!
Thursday, 20 February 2020 - 19:56

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட... Read More