பிரியந்த லியனகே நியமனம்..

Friday, 13 December 2019 - 10:39

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
இரத்தினபுரி மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ரஞ்சித் டி சொய்ஷாவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு உடகம லியனகே வருண பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ரஞ்சித் சொய்ஷாவுக்கு அடுத்தப்படியாக கூடுதல் வாக்குகள் பெற்றுக்கொண்டவர் என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட உடகம லியனகே வருண பிரியந்த லியனகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
அவர் குறித்த தேர்தலில் 49 ஆயிரத்து 850 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
 
இதேவேளை அவர் தற்சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் நிவித்திகலை தொகுதிக்கான பிரதிநிதியாக செயற்பட்டு வருகின்றார்.
 
தேர்தல் நியதிகளின் அடிப்படையிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஷாவுக்கு பின்னர் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலும் தான் தெரிவு செய்யப்பட்டமை மகிழ்சியளிப்பதாகவும் உடகம லியனகே வருண பிரியந்த லியனகே எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மக்களுக்கு தனது சேவையை மேலும் சிறந்த முறையில் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 


பல்வேறு கருத்துக்கள்..
Thursday, 20 February 2020 - 20:57

2020ஆம் ஆண்டுக்கான வாக்கு கணக்கு குறித்து ஆளும் கட்சி மற்றும்... Read More

திறக்கப்பட்டுள்ள வீதி
Thursday, 20 February 2020 - 20:18

தி பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக... Read More

சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு ..!
Thursday, 20 February 2020 - 19:56

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட... Read More